ஒன்ராறியோவின் மாகாண கல்வி அமைச்சர் covid-19 தடுப்பூசிகளை போடுவதில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
அமைச்சர்களான அகமது ஹூசைன் பாட்டி ஹைது மற்றும் அனிதா ஆனந்த் ஆகியோருக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
“பல்வேறு வயது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஏற்கனவே ஏராளமான மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன” என்றும் ஒன்ராறியோவின் மாகாண கல்வி அமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்