நல்லூர், கிட்டு பூங்காவின் முகப்பின் அடையாளமாக இருந்துவந்த கொட்டகை விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதனால் பூங்காவின் முகப்பு பகுதி முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.