பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் கீச்சகப் வெளியிட்டுள்ள பதிவில்,
“கொரோனா பிடியில் இருந்து தப்பிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றினேன். எனினும், சிறிய அறிகுறிகள் தெரிந்ததால் சோதனை செய்து கொண்டேன். அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை.
வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான வழிமுறைகளை கடைபிடித்து வருகிறேன்.” என்று கூறியுள்ளார்.