சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரிக்கும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறிலங்காவுக்கு ரஷ்யா வழங்கி வரும் ஆதரவுக்கு ஜெனரல் கமல் குணரத்ன நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனில் ஐ ஷ்கோடா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு பிரிவுக்கான மேலதிக செயலாளர் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.