சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க அரசு, எப்போதும் அரணாக இருக்குமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“தி.மு.க.வினர் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு எங்களது மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. அத்துடன் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களினால் நூறு நாட்களுக்குள், பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வுகளை முன்வைக்க முடியுமா?
இதேவேளை சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும், அ.தி.மு.க அரசு அரணாக இருக்கும். சாதி, மத சண்டைகளும் ஒருபோதும் தமிழகத்தில் இடம்பெறாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.