கனடாவின் கன்சர்வேட்டிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உபகுழு ஆகியவற்றின் மீது சீனா தடைகளை விதித்துள்ளதாக அறிவித்துள்ளமையானது கருத்தச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள பெரு முகாம்களில் உய்குர் முஸ்லிம் இன மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த மக்கள் மிக மோசமான அளவில் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவதாகவும், ஜனநாயக உரிமைகள் மறுப்பு, மனித உரிமைகள் மீறப்படும் விடயங்கள் அனைத்தும் அங்கு தாராளமாக நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயங்களை வெளிப்படுத்திய கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் சோங்கிற்கு எதிராக சீனா தடைகளை விதித்துள்ளதோடு நாடாளுமன் உப குழுவின் குற்றச்சாட்டுக்களையும் பகிரங்கமாகவே மறுத்துள்ளது.