கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி தொடக்கம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஒரு தொன்னுக்கு 25 சதம் வரி என்ற ரீதியில் நான்கு இலட்சத்து நாற்பதாயிரம் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு கிடைக்கவிருந்த வரிப்பணம் 2,187 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இந்த ஆண்டு பெப்ரவரி -மார்ச் மாதங்களில் மாத்திரம் 120 மெற்றிக்தொன் சீனி 25 சத வரி விதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 597 கோடி ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இவை வெறுமனே நான்கு நிறுவனங்களுக்காக செய்து கொள்ளப்பட்ட வரி குறைப்பு என்பதே முக்கிய குற்றமாகவுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.