ந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசியை கைவிட அரச மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகவும், இதற்கு மாற்றாக சீனா மற்றும் ரஷ்யாவின் தயாரிப்புகளான ‘சைனோபார்ம்’ மற்றும்’ஸ்புட்னிக்’ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பயன்படுத்த ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இம்மாத இறுதியில் சீனாவிடம் இருந்து ஆறு இலட்சம் “சைனோபார்ம்” தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும்,வெகு விரைவில் ரஷ்யாவிடமிருந்து 13 மில்லியன் “ஸ்புட்னிக்” தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் தேவைக்கேற்ப அதிக தொகை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாமை என்பவற்றை காரணமாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதார தரப்பினர், விரைவில் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவிலான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 அச்சுறுத்தல் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும் தொடர்ந்தும் தடுப்பூசிகளை போடும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.