ஆப்கானிஸ்தானின், ஹெல்மண்ட்( Helmand) மாகாணத்தில் தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் 10 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், சாங்கின் (Sangin) மாவட்ட காவல்துறைத் தலைவரும் உள்ளடங்கியிருப்பதாக அரசு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, வியாழக்கிழமை 7 தலிபான்களை கொன்றிருப்பதாக ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் அறிவித்திருந்தன.
ஆப்கானிஸ்தானில் அண்மையில், வன்முறைகள் தீவிரமடைந்து வருவதுடன், கடந்தமாதம் மட்டும், நாடு முழுவதும் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 270 பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 173 பேர் காயமடைந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் 166 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது