திருச்சி மேற்கு தொகுதியில், காவல் நிலையங்களில், தபால் வாக்குக்காக காவல்துறையினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 காவல்றையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, தில்லை நகர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் இருந்து 35 கடிதஉறைகளில் 70 ஆயிரம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தபால் வாக்கு போடும், காவலர்களுக்கு, வழங்குவதற்கான அந்த பணம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது,
இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.