பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் நாள்களில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, இந்தியப் பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானிய பிரதமர்கள் உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டிற்கான முக்கிய மைல்கல்லாக இந்த உச்சி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.