மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக மாநிலத்தில் இரவு நேர ஊடரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடற்கரை மற்றும் பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.