மான்செஸ்டரில் போராட்டத்தில் ஈடுபட்ட பதினெட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் காவல்துறை மற்றும் குற்ற சட்டமூல வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆனால் சென். பீட்டர்ஸ் சதுக்கத்தில் மெட்ரோலிங்க் பாதையில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
இதனை அடுத்து வீதியை முற்றுகையிட்டமைக்காக 18 பேர் கைது செய்யப்பட்டதாக கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.