கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில், வாகனத்தை சுத்திகரித்துக் கொண்டிருந்த ஒருவர், மின் ஒழுக்கினால், உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்பவரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு செல்வதற்காக இன்று காலை 7.30 மணியளவில் வாகனத்தை மின்சார சுத்திகரிப்பு கருவியினால் கழுவி கொண்டிருந்த போதே,இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
சுத்திகரிப்பு கருவிக்கு தவறான முறையில் மின் இணைப்பு வழங்கியதே இந்த விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.