திருகோணமலை – சம்பூர், இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற போது, முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய, கோணலிங்கம் லேனுஜன் என்ற சிறுவனே முதலையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இத்திகுளம் குளத்தில் நேற்று இரண்டு சிறுவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போதே, குறித்த சிறுவனை முதலை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நேற்று முதல் காணாமல்போயிருந்த சிறுவனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை, முதலை கடித்த நிலையில் கிராம சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.