தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க தலைவா் முருகனை ஆதரித்து, பிரதமா் நரேந்திர மோடி பிரசாரம் செய்யவுள்ளார்.
தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பாரிய கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அதற்கான பிரமாண்ட மேடை, பார்வையாளா்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தாராபுரத்தில் செவ்வாய் காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜக வேட்பாளா் முருகன் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 13 வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.