வட மாகாணத்தில் இன்றைய தினம் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
743 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சிறிலங்காவில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 260 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 821 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 243 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 388 ஆகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இன்னும் இரண்டாயிரத்து 712 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்