கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
துளசி செடியில் இருந்து தயாரிக்கப்படும் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து கொரோனாவை அழிக்கும் என்று வெனிசுவேலா ஜனாதிபதி தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனினும் அதற்கு அவர் மருத்துவ ரீதியான எந்த ஆதாரங்களையும் வழங்கவில்லை.
இதையடுத்து கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி, வெனிசுவேலா ஜனாதிபதியின் கணக்கை முகநூல் நிறுவனம், முடக்கியுள்ளது.
கொரோனா பற்றிய தவறான தகவலுக்கு எதிரான எங்கள் கொள்கைகளை மீறியதற்காக அவரது பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியை அகற்றியதாகவும், விதிகளை மீண்டும் மீண்டும் மீறுவதால் அவரது கணக்கை 30 நாட்களுக்கு முடக்குவதாகவும், முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.