முறையான அறிவிப்பின்றி கஞ்சாவுடன் எல்லையைக் கடந்தால் அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகவரகம் அறிவித்துள்ளது.
அந்த அபராதமானமு 2ஆயிரம் டொலர்கள் வரையில் இருக்கும் என்றும் முகவரகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னறிவிப்புக்களின்றி அனுமதிக்கப்பட்ட கஞ்சா அல்லது அதனுடன் தொடர்புடைய தயாரிப்புக்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றவியல் குற்றமாகும்.
ஆகவே முன்னறிவிப்புக்கள் இன்றி இத்தகைய பொருட்களுடனான பயணிகள் விசேட கவனத்தினைக் கொள்ளுமாறும் முகவரகம் மேலும் கோரியுள்ளது.