அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசி தொடர்பில் கனடாவின் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
அதற்கு அமைவாக பலமாகாணங்களில் தடுப்பூசி விநியோக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக 55வயதிற்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவது உடனடியாக அமுலாகும் வகையில் நாடாளவிய ரீதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக ஆய்வுகளைச் செய்ய வேண்டியிருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆலோசனைக் குழு குறிப்பிட்டுள்ளது.