ரொறன்ரோ, நோர்த் யோர்க் (North York) பகுதியில் இரண்டு பொதுப் பாடசாலைகள் இன்று தொடக்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Brian பப்ளிக் பாடசாலை மற்றும் Victoria Village பப்ளிக் பாடசாலை ஆகியவற்றில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இன்று தொடக்கம் அவற்றை மூடுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர் என்று, ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை தெரிவித்துள்ளது.
Brian பப்ளிக் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கும், Victoria Village பப்ளிக் பாடசாலையில், ஏழு மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.