கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தீர்மானித்து , தங்களுக்கு அறிவிக்காது பிறந்து 21 நாளேயான தமது சிசுவை தகனம் செய்தமையை ஆட்சேபித்து , சிசுவின் பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனையிலிருந்து தனிப்பட்ட காரணத்தினால் தாம் விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோத்தாகொட பகிரங்க நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, காமினி அமரசேகர, தெஹிதெனிய, யசந்த கோத்தாகொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை ஒத்திவைத்து நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.