சிகையலங்கார நிலையங்கள் உட்பட தனிநபர் சேவை வழங்கும் நிலையங்களை மீள ஆரம்பிப்பது தாமதப்படலாம் என்று ரொரண்டோ மேயர் ஜோன் டொரி (JHON TORRY) தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த நிலையங்கள் அனைத்தும் ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த அறிவிப்பு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடுத்தே முன்னைய அறிவிப்பு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக டொரி (TORRY) மேலும் குறிப்பிட்டுள்ளார்.