சர்ரே பாடசாலைகளில் அனைத்து ஊழியர்களும், மற்றும் 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவமாறு பல மாதங்களாக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.