ஜெனிவா தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தான் ஒருபோதும் கூறவில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“இந்தியா எங்களுக்கு ஆதரவளிக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறியது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது.
நான் இந்திய பிரதமரின் வார்த்தைகளையே எதிரொலித்தேன். சிறிலங்காவுக்கு இந்தியா எந்த அநீதியும் இழைக்காது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான் அந்த வார்த்தைகளையே பயன்படுத்தியிருந்தேன்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.