ஆசியாவின் இதயம் மாநாடு தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேவில் நாளை நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதற்காக பிராந்திய நாடுகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, 2011 ஆண்டு துருக்கியில் ‘‘ஆசியாவின் இதயம்’’ என்ற பெயரில் ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான மாநாடு நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட 50 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும், இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
எனினும் இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்புக்கு திட்டமிடவில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.