தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளின் போது, 319.02 கோடி ரூபா பணம் மற்றும், பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
“தமிழகத்தில் 88 ஆயிரத்து 947 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களில் 89 ஆயிரத்து 185 பேர் தபால் மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் 319.02ரூபா பணம் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகளவாக, சேலத்தில் 44.47 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.