இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்து பல மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு அண்மையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நேரில் கண்டவர்கள் அந்நாட்டு ஊடகங்களிடம், அதிக மழை, மின்னல் மற்றும் இடியின் பின்னர் இது நிகழ்ந்ததாக கூறியுள்ளனர்.