வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில், தடை செய்யப்பட்ட சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டு வந்த தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்த வாடி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
குடத்தனை மற்றும் பொற்பதி கடற்கரைகளில் சிறிலங்கா இராணுவ முகாமுக்கு அண்டிய பகுதிகளில் வாடிகளை அமைத்து தங்கியிருக்கும் தென்பகுதி மீனவர்கள், சுருக்கு வலையைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுருக்கு வலை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், அங்கிருந்து வெளியேறுமாறும், இவர்களுக்கு குடத்தனை,மற்றும் பொற்பதி மீனவர்களால் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையிலேயே, சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட வாடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.