ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும் எவ்விதமானவிடயங்கள் பேசப்பட்டுள்ளன என்பது தொடர்பில் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அதேநேரம், சீனாவின் ஆறு இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீனா சிறிலங்காவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் விரைவில் சிறிலங்காவை சென்றடையவுள்ளதாக சீன வெளியுறவுத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.