பாகிஸ்தானில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் இந்த மாத இறுதிக்குள் மீட்கப்படாது விட்டால் ஏப்ரல் 2 முதல் நாடு தழுவிய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தானின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் இந்த அழைப்பினை விடுத்தனர்.
தங்கள் அன்புக்குரியவர்கள் காணாமல் போனது குறித்து கவலை தெரிவித்த அவர்கள், தமது உறவுகள் மீட்கப்படுவதில் பாகிஸ்தான் அரசாங்கமும் அரசு நிறுவனங்களும் தீவிரமாக செயற்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
பாகிஸ்தான் அதிகாரிகள், காணாமலாக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பில் பலமுறை உத்தரவாதங்களை அளித்த போதிலும், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அக்குழுவினர் கூறினர்.