பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய அவுஸ்ரேலிய அமைச்சர்களான கிறிஸ்டியன் போர்ட்டர் (Christian Porter ) மற்றும் லிண்டா ரெனோல்ட்ஸ் (Linda Reynolds ) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) பல வார குழப்பங்களுக்குப் பின்னர், இன்று அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளனார்.
இதன்போது, கிறிஸ்டியன் போர்ட்டர் (Christian Porter ) சட்டமா அதிபர் பதவியை இழந்துள்ளார்.
அத்துடன், லிண்டா ரெனோல்ட்ஸ் (Linda Reynolds ) பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, செனட்டர் மைக்கேலியா கேஷ் சட்டமா அதிபராகவும், பீட்டர் டட்டன் (Peter Dutton) பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1988 இல் 16 வயது மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கிறிஸ்டியன் போர்ட்டர் (Christian Porter ) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, தனது நாடாளுமன்ற அலுவலக அறையில், இளம் ஊழியர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை தவறாக கையாண்டதாக லிண்டா ரெனோல்ட்ஸ் (Linda Reynolds ) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலின சமத்துவம் மற்றும் பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி அவுஸ்ரேலிய வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.