மியான்மரில், அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 459 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மியான்மரில் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு, இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தி வருவதால், தினமும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நடந்த தாக்குதல்களில் 459 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மியான்மரில் தென்கிழக்கு பகுதியில் கரேன் சிறுபான்மையினர் வசிக்கின்ற பகுதிகளில் மியான்மர் இராணுவம் வான் தாக்குதலை நடத்தி வருவதால், அங்கிருந்து 3 ஆயிரம் பேர் தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.