முதலமைச்சர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று ராசா தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். என் பேச்சால் முதலமைச்சர் கலங்கியதால் மன்னிப்பு கோருகிறேன்.
எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல; பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு. முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை.
என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாக பேசவில்லை என்றே தீர்ப்பளிப்பர்” என்றும் அவர் கூறியுள்ளார்.