தனியார் நிதி நிறுவனத்திடம் 6.84 கோடி ரூபா கடன் வாங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என்று, நடிகர் ரஜினிகாந்த் மனைவிக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோச்சடையான் படத்தை தயாரித்த போது, லதா ரஜினிகாந்த், வழங்கிய ஆவணங்களை ஏற்று கொண்டு, குறித்த நிதி நிறுவனம் 6.84 கோடி ரூபா கடன் வழங்கியிருந்தது.
இந்தக் கடன் மீளச் செலுத்தப்படாத நிலையில், குறித்த நிறுவனம், ‘லதா ரஜினிகாந்த் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானது. அந்த பணத்தை லதா ரஜினிகாந்த் வழங்க வேண்டும் என்று கோரி பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்தது.
இந்த வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று காவல்துறையினர் தரப்பில் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.