அமெரிக்காவில் ஏப்ரல் 19ம் நாளுக்குள் 90 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என அமெரிக்க ஜனதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனதிபதியாக பொறுப்பேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் 100 நாட்களில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதியளித்திருந்தார்.
அதற்கமைய அமெரிக்கா முழுவதும், 17 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஏப்ரல் 19ம் நாளுக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும் எஞ்சிய 10 சதவீதம் பேருக்கு மே 1 ஆம் நாளுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் கொடிய வைரசுடன் போரில் இருக்கிறோம், பாதுகாப்புகளை மேம்படுத்துகிறோம், ஆனால் இந்த யுத்தம் முடியவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.