அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசி தொடர்பில் கனடிய ஆய்வு நிறுவனங்களுக்கு பல்வேறு வேறுபாடான கருத்துக்கள் காணப்பட்டாலும் தற்போது அவை ஒன்றிணைந்து செயற்படுவதாக பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்திய அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கனடிய சுகாதாரத்துறை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு ஆகியனவே ஒன்றாக பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், சூழல், வயதெல்லை, பாலினம், உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தடுப்பூசியின் அவதானிப்புக்கள் தொடருவதாக அவர் மேலும் கூறினார்.