இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, டில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு,, இதயத்தில், அறுவை சிகிச்சை செய்து கொள்ள, மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.
அதன்படி, நேற்று அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.