கிரீமியா தன்னாட்சிக் குடியரசை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இரண்டு தனிநபர்கள் மற்றும் 4 நிறுவனங்களுக்கு எதிராக கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னியோ Marc Garneau இன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2014இல் கிரீமியா சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர், ரஷ்யா தொடர்ச்சியாக உக்ரேனின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை மீறி வருகிறது.
அத்துடன் கிரீமியாவில் தனது படைகளை நிறுத்தி அங்கு மனித உரிமை மீறல்களிலும் ரஷ்யா ஈடுபட்டு வருவதுடன் ஆயிரக்கணக்கான ரஷ்யர்களையும் குடியேற்றி வருகிறது.
இதனைக் கண்டிக்கும் வகையிலேயே இரண்டு ரஷ்யர்களுக்கு எதிராகவும் நான்கு நிறுவனங்களுக்கு எதிராகவும் கனடா பொருளாதா தடைகளை விதித்துள்ளது.