மாகாண சபை தேர்தலை தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகள் இணைந்த கலப்பு முறையில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாகாண சபை தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கட்சித் தலைவர்களை கூட்டி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சிறிலங்கா பொதுஜனப்பெரமுன 70சதவீதம் தொகுதி முறைமையையும், 30சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு முறைமை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
எனினும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி இந்த சதவீதத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றது.