கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது உறவுகளைத் தேடி கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆயிரத்து 863 நாள்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி, தங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்று தரும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நடத்தி வருவதாகவும் தங்களுக்கான தீர்வு சர்வதேசத்திடம் இருந்து விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.