அமெரிக்காவின் பைசர் – பயோஎன்டெக் மற்றும் மொடர்னா கொரோனா தடுப்பூசிகளின் முதலாவது செலுத்துகையில் 80சதவீதம் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாட்டு நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது. அதேநேரம், இரண்டாவது செலுத்துகையின் ஊடாக 90 சதவீத நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த நிறுவகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்விற்காக குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட 4 ஆயிரம் பேர் வரையில் கண்காணிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.