தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலியின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த, தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி, சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
உயிரிழந்த ஜனாதிபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய நிலையில் நெரிசல் ஏற்பட்டு பெருமளவானோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பலர் உயிரிழந்துள்ளதை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தன்சானிய அரசு அறிவித்துள்ளது.