அரசியல் பின்புல நோக்கத்துடனேயே தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விவகாரங்கள் முடக்கப்பட்டு கொண்டிருக்கும் வரையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தமிழ்மக்களுக்கான பொறுப்புக்கூறலை முடக்கிய கூட்டமைப்பும் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது என்றும் அவர்குறிப்பிட்டார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் அண்மைக்காலப் போக்குகள் மிகவும் பாரதூரமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்..