மகளிருக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்ய ஒவ்வொரு மாவட்டங்களிலும், தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என நாடாளுமன்ற தி.மு.க துணை தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
விருகம்பாக்கத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”அ.திமு.க ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள் தான். அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவரகளில் 15 சதவீதமான குற்றங்கள் கூட தண்டிக்கப்படுவது கிடையாது.
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு என தனிநீதிமன்றம் அமைக்கப்படும். குடியுரிமை திருத்த சட்டம் சிறுப்பான்மை மக்களுக்கு எதிரானது. இந்த சட்டத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க வாக்களித்தது. ஆனால் இப்போது இந்த சட்டத்தை இரத்து செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம் எனப் பேசுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.