தமிழக முதல்வர் பழனிசாமி குறித்தும், அவரது தாயார் குறித்து அவதுாறாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை, தலைமை தேர்தல் அதிகாரி முன் தோன்றி, விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை மாலை 6 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அவரை முன்னிலையாகுமாறு தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் குறித்தும், அவரது தயார் குறித்தும் ராசா அவதுாறாக பேசியிருந்த நிலையில், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ராசா முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் பேசியது தொடர்பாக வருத்தம் தெரிவித்திருந்தார்.