பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு புதிய கட்டுப்பாட்டுகளை மாகாண பொதுசுகாதாரத்துறையின் தலைமை வைத்தியர் போனி ஹென்றி (Bonnie Henry) அறிவித்தார்.
அடுத்து வரும் மூன்று வாரங்களுக்கு புதிய விதிகளை உள்ளடக்கிய கொரோனா பாதுகாப்பு முறைமை அமுலாக்கப்பட்டள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அடுத்த மூன்று வாரங்களில் கடுமையான நிபந்தனைகள் அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் ஏப்ரல் 19ஆம் திகதி வரை விஸ்லர்-பிளாக் காம்ப் (Whistler-Blackcomb) பனிச்சறுக்கு விடுதியை மூடவும் மாகாணம் முடிவு செய்துள்ள மை குறிப்பிடத்தக்கது.