55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கனடாவின் சுகாதார அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதானது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தடுப்பூசித் திட்டத்துக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர், இந்த வாரத்தில், அமெரிக்காவில் இருந்து 1.5 மில்லியன் அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்துகள் கனடாவுக்கு கிடைக்கவுள்ளன.
இந்த நிலையிலேயே 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கனடாவின் சுகாதார அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து அரிதான சூழலில், குருதி உறைதலை ஏற்படுத்துவதாக கரிசனை எழுந்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தடுப்பூசி ஆலோசனை குழுவின் ஆலாசனையை அடுத்தே, ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்டா ஆகிய மாகாணங்களின் அதிகாரிகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.