ஒன்ராறியோவில் அதிகளவில் இளம் வயதில் கொரோனா தொற்றினால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவதாக மாகாண முதல்வர் டக் போர்ட் கவலை வெளியிட்டுள்ளார்.
“தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
குறைந்தது 410 பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தேவைப்பட்டால் முடக்க நிலையை அறிவிப்பதற்கும் தயங்கப் போவதில்லை.
எமது சுகாதாரத்தை விட மேலானது வேறேதும் கிடையாது.
பொருளாதாரம் முக்கியமானது தான், ஆனால் ஆரோக்கியம் இல்லாமல் பொருளாதாரத்தை பேண முடியாது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.