யாழ்ப்பாணக் குடாநாட்டின் இரண்டு பிரதான நகரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
யாழ். நகரப் பகுதி மற்றும், திருநெல்வேலி சந்தை மற்றும் நகரப் பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பகுதிகள் முடக்கப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பிரதான தனியார் வர்த்தக நிறுவனங்கள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள், இதனால் மூடப்பட்டுள்ளன.
பல நாட்களாக இந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அத்தயாவசியப் பொருட்களின் விநியோகம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈஸ்டர் மற்றும் சித்திரைப் புதுவருட பண்டிகை காலத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், வர்த்தகர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாதிரிகள் பெறப்பட்டுள்ள போதும் அவை தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாமதத்தினால், அத்தியாவசிய பொருட்களுக்கு குடாநாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.